மட்டு அரச
அதிபர் தொடர்பில் உண்மையான செய்திகளை நன்கு ஆராய்ந்து நாம் வெளியிட்டிருந்தோம்.
நேற்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் எமது செய்தி
தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
வருகின்ற
பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு என்று கருத்துக்கணிப்பிற்கு விட்டிருக்கின்றோம்.
இவ்விடயத்தினையும் இவர் விமர்சித்திருந்தார்.
தனது கருத்தில்
“ நான் உட்பட
சம்பந்தன் ஐயாவை கூட முகநூலில் வாக்கு விகிதம் கேட்டு போட்டு இருக்கிறார், இனி அமெரிக்க ட்ரம், பராக் ஒபாமாவைக் கூட
போடுவார்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு இணையத்தளம்
கருத்துக்கணிப்புக்களை நடாத்துவது இவருக்கு தெரியாதுபோலுள்ளது.
அமெரிக்க ட்ரம், பராக் ஒபாமாவைக்கூட மட்டுமல்ல உலக தலைவர்கள் தொடர்பிலும் கருத்துக்கணிப்பை ஒரு
ஊடகம் என்ற வகையில் நாம் நடாத்துவோம்.
கோட்டாபஜவின்
பங்காளியாக இருந்துகொண்டு தம்மை விமர்சிப்பவர்களை
நோக்கி இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது எதிர்காலத்தில் ஊடக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து
விடுவார்களோ என்கின்ற அச்சம் ஏற்படுகின்றது.
கோட்டாபஜவின்
பங்காளிக் கட்சிகள் இவ்விடயங்களை கோட்டாபஜவிடம் கொண்டு செல்வார்களா? அல்லது தாங்களும்
இவ்வாறானவர்களுடன் சேர்ந்து பயணிப்பார்களா?