வித்தியாசமான முறையில் இலஞ்சம் வாங்கும் போக்குவரத்துப் பொலிசாரின் கைவரிசை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில போக்குவரத்துப் பொலிசார் இலஞ்சம் வாங்குவது அதிகமாக அவதானிக்க கூடியதாக உள்ளது.
அதிலும் வித்தியாசமான முறையினை சில பொலிசார் பின்பற்றுவதை அறியமுடிகின்றது.

அண்மையில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியுள்ளது. இரு சாராரும் சமாதானப்பட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். 
இதை அறிந்த போக்குவரத்துப் பொலிசார் மோதியவரின் வீட்டுக்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தை பறித்துக்கொண்டு சென்று 5000 ரூபாய் பணம் தந்தால் சாரதி அனுமதிப்பத்திரத்தை தருவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

மிகவும் வறிய நிலையில் வாழும் அவர்கள் கடன்பட்டு 5000 கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரத்தினை பொலிசாரிடமிருந்து பெற்றுள்ளனர்.
இவ்வாறான வேலைகளை தமிழ் மொழிபேசும் பொலிசாரே மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வாறான பொலிசாருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறித்த பொலிசார் பற்றிய முழு தகவலும் எம்மால் வழங்க முடியும்.
battitv24@gmail.com

Powered by Blogger.