தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயார் - யோகேஸ்வரன்



தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை பிள்ளையான் குழுவுக்கு பிடிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசா வெற்றிபெற்றால் கிழக்கிஸ்தான் உருவாகிவிடும் கிழக்கிலே தமிழர்கள் வாழ முடியாது என்று பிள்ளையான் குழுவினர் போலிப்பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பிரசாந்தன் கூறுகின்றார் தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.
முஸ்லிம்கள் தமிழர் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது. யாரும் எங்கேயும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம்.

இன நல்லுறவு வளர்க்கப்படவேண்டும். நாம் ஒற்றுமையோடு வாழ்கிறோம் இது இவர்களுக்கு பிடிக்கவில்லை.

கிழக்கிலே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் அதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் நாம் தயார் என்றார்.

Powered by Blogger.