அருவி பெண்கள் வலையமைப்பினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
















அருவி பெண்கள் வலையமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏழு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு கல்வி வலயத்தில்  மூன்று பாடசாலைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தது.


அவ்வாறாக பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான சின்ன உப்போடை புனித திரேசா பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கே குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் திருமதி.துஸ்யந்தி ஜெயவதனி தலைமையில் இடம்பெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.


UNOPS நிதி நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் குறித்த நிகழ்வில் அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அருவி பெண்கள் வலையமைப்பினால் குறித்த பாடசாலையினை துப்பரவு செய்வதற்கென இரண்டு இலட்சம் பெறுமதியான சுத்திகரிப்பு உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், அருவி பெண்கள் வலையமைப்பானது தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்சார்ந்து செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.