மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண இன்று (01.01.2026)  புதிய மாவட்ட செயலக வளாகத்தில்  நடைபெற்றது.










புதிய ஆண்டினை வரவேற்று தமது அரச கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9.00 மணிக்கு  மாவட்ட  அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


இதன் போது உத்தியோகத்தர்கள் அனைவரும்  உறுதிமொழியை எடுத்துக் கொண்டதுடன், அரசாங்க அதிபர்  தனி நபர் மாற்றத்தின் மூலமே சமூகத்தில் பாரிய மாற்றுத்தை ஏற்படுத்த முடியும் மேலும் மக்களுக்கு ஊழல் அற்ற சேவையை வழங்க அனைவரும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என்றார் .


இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,  பிரதம உள்ளகக்  கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

Powered by Blogger.