(தம்பிராசா ஜனார்த்தனன்) வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் மாயச் சித்திரம் வரைதல். (MYSTERY PAINTING)
மாயச் சித்திரம் வரைதலானது உளவியல் குணப்படுத்தல் மற்றும் உடலியக்கத் திறன் விருத்தியினூடாக சிந்தனாசக்தியை விருத்திசெய்து அழகியலால் உள்ளத்தைப் பண்படுத்தும் ஒரு சித்திரம் வரைதல் செயற்பாடாகும். இது சிறுவர்கள் வளர்ந்தோர் ஆகியோரின் பங்களிப்புடன் வரையப்படுவதாகும்.
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் முப்பாதாவது ஆண்டுகால மகிழ்வின் கொண்டாட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக மாயச் சித்திரம் வரையும் நிகழ்வு எதிர்வரும் 11.02.2026 புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயல் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள மாவட்டக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தின் முகப்பிலுள்ள சுவரில் (அரசடி புதிய பயனியர் வைத்தியசாலைக்கு அருகில்) சிறுவர்கள் மற்றும் பெற்றோரில் பங்களின்புடன் வரையப்படவுள்ளது.
ஆர்வமுடையவர்கள் இந்த நிகழ்;வில்இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினர்.
'பிள்ளைகளின் ஆனந்தத்தில் மகிழ்வோம்...
சமாதானத்தை விதைப்போம்...'
அத்துடன் அடுத்த தலைமுறைக்கான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்ப 'மகிழ்வான குடும்பம்' எனும் தலைப்பில் வீடுகளிலும் மாயச் சித்திரம் வரைவதற்கு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவினர் ஆயத்தமாகவுள்ளனர். குடும்பத்திலுள்ள அனைவரதும் பங்களிப்புடன் வீட்டின் ஒரு சுவரில் இதனை வரைந்துகொள்ள முடியும். விருப்பமானவர்கள் தொடர்புகொள்ளவும்.
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவுடன் இணைந்துகொள்ள தயக்கமின்றித் தொடர்புகொள்ளுங்கள்.
(Butterfly Peace Guarden Hot Line - 0775599422)
email - butterflypeacegardenbatticaloa@gmail.com



