இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் மோடி அனுரா ஒப்பந்தம் கிழித் தெறிய வேண்டும் மக்கள் போராட்ட இயக்க இணைப்பாளர் த.கிருபாகரன்.
இந்தியா பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அனுரா செய்த ஓப்பந்தம் எல்லாமே இலங்கையை தனது ஒரு பகுதியாக காட்டும் ஒரு ஒப்பந்தம் அவ்வாறே ஜ.எம்.எப் உடனான ஒப்பந்தம் வெளிநாட்டில் உற்பத்தி செய்கின்ற பொருட்களின் சந்தையாக இலங்கையை மாற்றுவதற்கு செய்யப்படும் ஒப்பந்தம் எனவே இவைகள் கிழித்தெறியப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.
மக்கள் போராட்ட இயக்கம் அனுரா மோடி திருட்டு ஒப்பந்தத்தை கிழித்தெநி, ஜ.எம.;எப் மரணப்பொறியை எதிர்திடுவோம் எனம் தொனிப் பொருளில் ஒருநாள் எதிர்ப்பு சத்தியாகிரக போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்றது இதன் போது கலந்துகொண்ட த.கிருபாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவுடன் ஜனாதிபதி அனுரா செய்த ஓப்பந்தம் என்ன? ஏன் செய்தார்? எதற்காக செய்தார்? என இன்றுவரைக்கும் பதில் இல்லை தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டால் அப்படி ஒன்றும் தரவில்லை ஆனால் 7 ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர் அதேவேளை இந்திய பத்திரிகைகளில் இலங்கையுடன் 10 ஒப்பந்தங்கள் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இந்த ஒப்பந்தங்கள் எல்லாமே இந்தியா தனக்கு சாதகமாக இலங்கையை தனது ஒரு பகுதியாக காட்டும் ஒரு ஒப்பந்தமே என தெரியாமல் இருக்கின்றது. அதனால் தான் மகவல்; அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டால்; சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
எனவே இந்த அனுரா மோடிக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட திருட்டு ஒப்பந்தம் கிழித்தொறிய வேண்டும் ஜ.எம்.எப் ஊடாக எடுக்கப்படும் திட்டம் இனங்களுக்கிடையே சம உரிமை கிடைக்காது என்பதை விளங்கி கொண்டோம்.
ஏற்கனவே ஜஎம்.எப் இடம் 16 முறை கடன் வாங்கி கொண்டு சீரழிக்கப்பட்டு ஒரு யுத்த சூழ்நிலைக்குள் வைத்திருந்ததே தவிர எமது பிரச்சனையை தீர்க்க எந்து ஒரு முடிவும் எடுக்கவில்லை.
உள்ளுரில் உற்பத்தி செய்கின்ற கறுப்பு சீனி உற்பத்தியாளர்களிடம் 18 வீதம் வரிஎன்றதால் கறுப்பு சீனியை உற்பத்தி செய்து விற்கமுடியாமல் உள்ளது அந்த சீனி உற்பத்தி செய்கின்றவர்களின் பிரச்சனை தீர்க்காமல் வெளிநாட்டில் இருந்து நோய்கள் வரக்கூடிய வெள்ளைச் சீனியை 150 ரூபாவுக்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்து அதில் சிறிய இலாபத்தை வைத்துக் கொண்டு வருகின்றனர்.
அதேவேளை உலகமே வெள்ளை சீனியில் புற்று நோய்கள் ஏற்படும் என தெரிவித்தும் இந்த அரசு தேசிய உற்பத்தியை வளப்படுத்துவதற்கும் அதற்கான வரியை இல்லாமல் செய்யாமல் பணத்துக்காக ஜ.எம்.எப் திட்டங்களுக்கு அமைவாக வெளிநாட்டில் உற்பத்தி செய்கின்ற பொருட்களின் சந்தையாக இலங்கை மாற்றுவதற்கு செய்யப்படும் ஒப்பந்;தங்கள் தான் இவைகள்,
அவ்வாறே ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் தனியர் கல்விலை வளப்படுத்தும் மற்றும் இலவச கல்வியை இல்லாமல் செய்வது என்ற கோட்பாட்டில் இருந்தவர்களை உள்வாங்கி கொண்ட ஒரு நிர்வாகத்தை உருவாக்கி வெறுமனவே தங்களுக்கு வருமானம் கிடைக்கின்ற ஒரு மோசமாக கல்வி தொடர்பாக 4 ஆயிரம் கோடி ரூபா முதலீட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முற்பட்டனர். அப்போது மாணவர்கள் அமைப்புக்கள் மக்கள் போராட்ட இயக்கங்களும் போட்டமூலம் அந்த ஒப்பந்தத்தை தடுத்துனர்.
இன்று இருக்கின்ற அரசு 10 வருடத்துக்கு முதல் தொழிலாளர் போராட்டம் அவர்களின் உரிமைகள் என சந்திக்கு சந்தி நின்று பேசியவர்கள் இன்று நாட்டுக்கு இலகுவாக பணம் கிடைத்ததும் அதற்கு பின்னால் ஓடும் அரசாகவுள்ளது.
ஏற்கனவே திருடிய பணத்தை பிடிப்பதாகவும், இலங்கையில் இனவாதத்தை தூண்டியவரை பிடிப்பதாக தெரிவித்து ஆட்சி ஏறிய இரசு அதனை பிடிக்கவில்லை ஆனால் யார் யார் முன்னின்று செய்தவர்களை பிடிக்காது அவன் யாருக்கு பணம் கொடுத்து செய்வித்தானே அவனை பிடித்து உள்ளுக்குள் வைத்து விட்டு கதை சொல்லுகின்றனர் ஏன் என்றால் அவன் தமிழன்தானே எனவே அவனை பிடித்து உள்ளுக்குள் வைத்தால் எவரும் பிரச்சனை படுத்த மாட்டார்கள்
உண்மையில் முன்னின்று பணம் கொடுத்தவர்கள் யார், செய்ய சொன்னவர் யார் என
உலகத்துக்கே தெரியும் தெரியும்; கோட்பாயவை, மகிந்தவை, ரணிலை கைது செய்து உள்வைத்து விசாரணை செய்திருக்கலாம் ஆனால் அப்படி செய்ய வில்லை ஏன் என்றால் அவர்களை பிடித்தால் சிங்கள மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக செய்ய சொன்னவர்களை பிடிக்காது செய்தவர்களை பிடிக்கின்றார்கள்.
இதேபோல செம்மணி புதைகுழியில் 103 பேரின் எச்சங்கள் எடுக்கப்பட்டதும் அதற்கு இராணுவமே சாட்சி சொல்லியுள்ளது சாட்சியும் இருக்கு செய்தது என சொல்வதற்கு ஆளும் இருக்கு அவருக்கு தண்டனையும் வழங்கியிருக்கு இனி அதை செய்வதற்கு இலகுவாக இருக்கும் என கேட்டால் பணத்தை கொடுத்து பட்டலந்தை பிரச்சனையை தூக்கி கதைக்க விடுகின்றனர். இந்த பட்டலந்த பிரச்சனைக்கு சாட்சி இதுவரை இல்லை யார் செய்தது எவர் என யாரிடம் கேட்பது.
எனவே அதற்கு நடவடிக்கை எடுக்காது வேறுபக்கம் திசைதிருப்ப இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் இனவாதம் இல்லை என வெளிபூச்சாக கதைத்துக்கொண்டு இந்தியா அமெரிக்கா சீனா சொல்லுவதை கேட்டு நடக்கின்றனர். இதனால் இன்று மீண்டும் இந்த நாட்டில் மீண்டும் இனகலவரம் வருவதற்கான பிற்போக்கான கட்சிகள் தங்களுக்குள் ஒரு இணைவை ஏற்படுத்தி கொண்டு வெளிவருகின்றனர்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மலையக மக்களின் அடிப்படை சம்பளம் 2 ஆயிரம் தருவோம் என்றனர் ஆனால் இன்று வரைக்கும் இல்லை 1300 ரூபா 1600 ரூபா தருகின்றோம் அடுத்த 6 மாத்தில் தருவோம் என்று கதையளக்கவேண்டாம்
தேயிலையின் விலை அதன் கொள்முதல் விலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் விலை பார்க்கும் போது அவர்களுக்கு 2500 ரூபா சம்பளம் வழங்க முடியும். ஆனால் அதை செய்யாது ரணில் ராஜபக்ஸ அரசாங்கங்கள் ஏற்கனவே செய்தது போல எல்லா கொம்பனிகளையும் வைத்து கொண்டு என்னமாதிரி இந்த நாட்டை கையாண்டுதே அதே மாதிரி கையாண்டுகொண்டு வருகின்றார்கள்
இலங்கை சட்டத்தின்படி ஒருவருடைய காணியை இன்னொருவர் கைப்பற்றினால் நீதிமன்றம் சென்றால் அந்த காணியை விட்டு வெளியேறவேண்டும் அது சட்டம் அதை விடுத்து அரசபடையினர்; கோயில் கட்டிப்போட்டேன் விகாரை கட்டிப்போட்டேன் அல்லது எனது மச்சான் மாமனுக்கு எழுதிபோட்டேன் என கதை சொல்லாமல் சட்டத்தை தெரிந்த நீங்கள் கூட செய்யவில்லை
எனவே இவ்வாறான நிலமையை மாற்றவேண்டுமாயின் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் சிங்களம் முஸ்லீம் பறங்கியர் உட்பட சகல மக்களும் இன பேதமின்றி மக்கள் போராட்டத்துடன் இணைந்து குரல் கொடுத்தால் தான் பிற்போக்கான ஒரு இனவாத அரசு வேண்டாம் என இந்த அரசை பின்வாங்க முடியும் என்றார்.