பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தோற்றவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பாலீஸ்வரர் ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜை
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் எதிர்வரும் 10/08/2025 ஞாயிற்றுக்கிழமை தோற்றவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்றையதினம் 01/08/2025 வெள்ளிக்கிழமை பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் பெற வேண்டும் என்பதற்காக விசேட அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இவ் பூஜை வழிபாடுகளில் பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் பூஜை வழிபாடுகளின் பின்னர் மாணவச்செல்வங்களுக்கு ஆலய நிருவாக சபையினரால் பென்சில் , பேனை என்ற கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது..