பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாமல் வெளிநாடு சென்றது ஜனாதிபதி அநுர மாலைதீவு சென்ற அதே விமானத்திலா ?

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (28) காலை வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷ பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,  அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இன்றைய தினம் பிற்பகல் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. 

ஆனால் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் காலை வெளிநாடு சென்றுள்ளதால் நாளை செவ்வாய்க்கிழமை (29) தனது பிடியாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Powered by Blogger.