மட்டக்களப்பில் 'நாடே முதன்மை' திட்டத்தில் சேதமைந்த வீடுகளை திருத்துவதற்கு கிழக்கு ஆளுநரினால் 43.2 மில்லியன் ஒதுக்கீடு முதற்கட்டமாக 65 பேருக்கு காசோலை வழங்கி வைப்பு.

 மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 'நாடே முதன்மை' எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மானிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65  பேருக்கு 60 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை இன்று திங்கட்கிழமை (28) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.



கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்துள்ள 216 வீடுகளை புனர்நிர்மான 
செய்வதற்கு  43.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கான காசோலை வழங்கம் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் பொறியியலாளர் எஸ்.வினோராஜ் தலைமையில் இடம்பெற்றது.


இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் வீ.சுகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் சுற்றுலா துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமாகிய வனிதா செல்லப்பெருமாள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுசாயினி சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க 57 பேருக்கு தலா ஒரு இலச்சம் ரூபா வீதம் 57 இலச்சம் ரூபாவும்.

இரண்டாம் கட்ட கொடுப்பனவு பெறும் எட்டு பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம்' ரூபா வீதழ் 3 இலச்சத்து 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.





Powered by Blogger.