மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ - கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மாநகர சபையினர்!
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ - கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மாநகர சபையினர்!!
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு நாகரசபை தீயணைப்பு படடையினர் குருக்கள்மடம் இராணுவத்தினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
குறித்த பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் பற்றி தீ பரவத் தொடங்கியதுடன், பனை மரங்கள் மற்றும் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத எரிபொருள் தாங்கி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகர உறுப்பினர்கள்
தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.