மட்டக்களப்பில் வீதி விபத்தை தடுக்க சைக்கிள்களுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு.

 மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை வியாழக்கிழமை (10) செங்கலடி பிரதேசத்தில் மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆரம்பித்து வைத்தார்.



ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ.   ஜயலத் தலைமையில் இட்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, மாவட்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஐP. சரச் சந்திர, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொணடனர்.

இதன்போது வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர்களை நிறுத்தி துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிவைத்தனர்.



Powered by Blogger.