மட்டக்களப்பில் கறுப்பு யூலை படுகொலை செம்மணி புதைகுழி சர்வதேச நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.

 கறுப்பு யூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும்  வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு செம்மணி புதைகுழிக்கும் சர்வதேச நீதிவேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை (28) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 



மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்பு ஆர்பாட்டத்தில் கிறிஸ்தவ குருமார்கள் காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர் கலந்துகொண்டு கறுப்பு யூலை சிறிலங்காக அரச பயங்கரவாதத்தின் கெடூரம், செம்மணி புதை குழிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். 





Powered by Blogger.