UDA நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மானிக்கப்பட்ட விடுதியினை மீண்டும் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தல்.
மாநகர சபை முதல்வரின் தலைமையியிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலியாட்ட குழு தலைவி மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையிலும் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய மட்டக்களப்பு தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் பொருட்கள் கொள்வனவு செய்யும் பெண்களுக்காகவும் அமைக்கப்பட்ட மலசல கூடத்தினை தற்பொழுது அதனை பயணிகள் தங்கும் விடுதியாக மாற்றியதை தொடர்ந்து இன்று 2025.08.07 கௌரவ முதல்வர்,கௌரவ பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பார்வையிட்டு அதனை மீண்டும் பெண்களின் நலன் கருதி அமைப்பதற்கான முன்னெடுப்பினை மேற்கொண்டனர்.