மட்டக்களப்பு மாநகர சபையின் நிலுவையினை கருத்தில் கொண்டு மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற இருபது வட்டாரங்களிலும் மாநகர சபைக்குரிய நிலுவையினை செலுத்த முடியாமல் இருக்கின்ற மக்களின் நலன் கருதி இன்று மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபை உத்தியோகத்தர்களை ஐந்து குழுக்களாக பிரித்து இருபது வட்டாரங்களிலும் நிலுவைகளை அறவிடுவதற்கான நடமாடும் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது.இதில் கௌரவ மாநகர பிரதி முதல்வர்,கௌரவ மாநகர ஆணையாளர்,நிர்வாக உத்தியோகத்தர்,கணக்காளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் பங்கேடுத்தனர்.




