தமிழ் மொழி மாணவர்களுக்கு தேசிய மட்ட அழகியல் போட்டி இதுவரை நடாத்தாது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது பெற்றோர் கடும் கண்டனம்

 தேசிய மட்ட அழகியல் தொடர்பான இந்த வருடத்துக்கான போட்டிகள்  சிங்கள மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் வெளியிடப்பட்டு நடனப்போட்டிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்று முடிவுற்றுள்ளது  ஆனால் தமிழ் மொழி மாணவர்களுக்கு இதுவரை சுற்று நிருபம் வெளியிடப்படமால் தமிழ் மொழி மாணவர்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்ளதாக பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்




தேசிய மட்ட அழகியல் தொடர்பான போட்டிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையில் மாணவர்களின் அழகியல் மேம்பாட்டினை இலக்காக கொண்டு களம் அமைத்துக் கொடுக்கின்ற ஒரு போட்டி நிகழ்வாக நடைபெற்று வந்தது. 

இந்த போட்டி பல வருடங்களாக சிங்கள மொழிமூலமாக தேசிய மட்டத்தில் பல நிகழ்ச்சிகளை கொண்டு சிங்கள மாணவர்களுக்கு நடைபெற்று வந்தது இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. 


இருந்த போதும் கடந்த சில வருடங்களாக தமிழ்மொழியில் இந்த போட்டிகள் நடைபெற்றது வந்தது.  இந்த போட்டிகளில் பங்கு பற்றும் மாணவர்கள் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்களின் பெறுபேறுகள் பல்கலைக்கழக அனுமதியின் போது அவர்களுக்கு துணைபுரிந்து ஏதே ஒருவகையில் பல்கலைகழக அனுமதியில் செல்வாக்கை செலுத்த மாணவர்களுக்கு ஒரு சுபீட்சமான ஒரு பாதையை இட்டுச் சென்று பெரும் பங்காற்றியுள்ளமை மறுக்க முடியாத ஒன்று.


அந்த வகையில் கடந்த 3 வருடங்களாக இந்த தேசிய மட்ட அழகியல் போட்டியானது தமிழ் மொழி மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பல நிகழ்சிகளை கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆயினும் இந்த போட்டிகளானது 2025 ம் ஆண்டு ஓகஸ்;ட் மாதமாகியும் தமிழ் மொழியில் சுற்று நிருபங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ஆனால் சிங்கள மொழி மாணவர்களுக்கு கடந்த பெப்பிரவரி சுற்று நிருபம் வெளியிடப்பட்டு நடனப்போட்டி தேசிய மட்டத்தில் இடம்பெற்று முடிவுற்றுள்ளது. 


இந்த வருடம் முடிவடைய 3 மாதங்கள் மீதமாக இருக்கின்றது ஆனால் நவம்பர் மாதத்துக்கு இடையில் போட்டிகள் யாவும் நடைபெற்று முடிக்கப்பட வேண்டும் ஆனால் இன்னும் தமிழ் மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் கூட வெளியிடப்படாதலால்  போட்டிகள் நடைபெறாது இருக்கின்றது.


இதனால் இந்த வருடத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் பாரிய தாக்கம்  ஏற்படுவதுடன் மாணவர்களுக்கான வாய்ப்பை இழக்க செய்கின்றது. இவ்வாறு தமிழ் மொழி மாணவர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது என பெற்றோர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.


இந்த போட்டிகளை கல்வி அமைச்சு ஏன் தமிழ் மொழி மாணவர்களுக்கு இதுவரை நடத்தாமல் இருக்கின்றது என்பது ஒரு கேள்விகுறியாகும். எனவே இந்த போட்டிகளை உடனடியாக அரசாங்கம்  நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Powered by Blogger.