தமிழ் மக்கள விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனியபாரதியின் முன்னாள் வாகன சாரதியான த்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செழியன் என்றழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவரை நேற்று திங்கட்கிழமை(7) கல்முனை நகரில் வைத்து சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல்; மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புட்ட கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாற மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றிய இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார அவரது சகா தச.தவசீலன் ஆகியோரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (6) சிஜடி யினரால் கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் இனிய பாரதியின் முன்னாள் சாரதியான திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த தனியார் பஸ்வண்டி சாரதியக கடமையாற்றிவரும் செழியன் என்றழைக்கப்படும் அழகரட்டணம் யுவராஜ் என்பவரை சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பொத்துவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனை பஸ்தாழப்பு நிலையத்தில் காத்திருந்த சிஜடி யினர் கல்முனை நகர் பஸ்தரிப்பு நிலையத்துக்கு பஸ்வண்டி வந்த நிலையில் அவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.