மட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' விழிப்புணர்வு பேரணி

 மட்டக்களப்பில்   'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'  எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புனர்வு பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ஆரம்பித்து காந்தி பூங்காவரையும் இடம்பெற்றது 


இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இரா.மனோகரன் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' விழிப்புணர்வு பேரணிக்கு அழைப்பையடுத்து  இன்று காலை 10.00 மணியளவில் தாண்டவன்வெளி தேவாலயத்துக்கு முன்னாள் சிவில் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மததலைவர்கள், மற்றும் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் ஓன்று திரண்டனர்.


இதில் வன்முறை எங்கு நடைபெற்றாலும் குற்றமே இணையத்திலும் கூட, பாதுகாப்பான இணையம் எங்கள் உரிமை, இணையத்தில் பெண்களை அடக்க முயலாதே நாங்கள் மீண்டெழுவோம், இணைய வன்முறையை நிறுத்து, பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் உண்மைய அறிய ஒருபோதும் செயார் மற்றும் கொமன்ஸ் சமூக ஊடகங்களில் பண்ணாதே, 


இணையதள வன்முறையை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றினைவோம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து நடைபவணியாக நகர் பொலிஸ் நிலைய சுற்றுவட்டம் சென்று அங்கிருந்து காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு பதாதையில் கையொழுத்து இட்ட பின்னர் போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.







Powered by Blogger.