மட்டக்களப்பில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறிமுறை கோரி ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கு சமூக இயக்கம் 'தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி' எனும் தொனிப்பொருளில்; இன்று சனிக்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர் இதனையடுத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று திரண்டனர்.
இதன்போது செம்மணி புதைகுழி இனபடுகொலையின் சாட்சி, சர்வதேச விசாரணைவேண்டும் என பல கோரிக்கைகளை வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கையொழுத்து பதிவு செய்த பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.