டக்ளஸ் சிவஞ்ஞானம் சந்தித்தமை தொடர்பாக தமிழரசு கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்-- ஈ.பி.டி.பி.
தமிழரசு கட்சியின்; சி.வி.கே. சிவஞ்ஞானம் எமது கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச் சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசு கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக கண்டிப்பதுடன் 2018 தமிழரசு கட்சி ஆதரவு கோரி வழங்கிய போது நீங்கள் மதுபோதையில் இருந்ததா? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? என மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி மட்டு மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா காட்டம்.
மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் ஈ பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு புதன்கிழமை (05) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி கே. சிவஞ்ஞானம் தேடிச் சென்று நேரில் சந்தித்தமை தொடர்பாக தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் என்பவர் எமது கட்சி செயலாளர் நாயகத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.
2018 ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் போது எங்கள் கட்சியின் தமிழரசு கட்சி ஆதரவு கோரினர். அதற்கு ஆதரவு வழங்கினோம் அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் மதுபோதையில் இருந்தார? அல்லது போதை மாத்திரைகள் பாவித்து கொண்டிருந்தார? அப்போது அவர் என்ன நிலையில் இருந்தார் என தெரியவில்லை?
முன்னாள் மறைந்த ஜனாதிபதி பிரேமதாச 1990 ம் ஆண்டு தமிழ் மக்களை உயிருடன் ரயர் போட்டு எரித்து படுகொலை செய்த ஒருவர் அவரின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்குமாறு இரா.சாணக்கியன் மேடையில் ஏறி ஆதரவு கோரினார் அப்போது இந்த ஆயுட்கால உறுப்பினர் தூக்க கலக்கத்தில் இருந்தீர்களா? இந்த விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்
அதேவேளை டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே தினத்தில் 150 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறார் இவ்வாறு சுகாதார தொண்டர் நியமனங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறார். கல்லடி சிவானந்தா இசை நடன கல்லூரி கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்த அவர் வடகிழக்கு என பார்க்காமல் தன்னால் இயன்ற அத்தனை சேவைகளையும் மக்களுக்கு செய்தார்.
இவ்வாறு மட்டு மாவட்டத்தில் இருக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை எடுத்து கொண்டீர்களானால் 30 வீதமான சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கியது அவர் என்பதை மறந்து விடக்கூடாது
டக்ளஸ் தேவானந்தா ஆயுத போராட்டத்தில் இணைத்துக் கொண்டு பலஸ்தீன பயிற்சிக்கு சென்று அங்கிருந்து திரும்பி வந்தபோது இந்த ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்தார். அப்போது இடம்பெற்ற சகோதர படுகொலைகளை வெறுத்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற சிந்தனையை கொண்டு தூர நோக்கோடு அவர் செயல்பட்டவர் என்பதுடன் அவரின் தங்கை தான் இலங்கையிலே முதல் முதல் பெண் போராளி இந்த உண்மை பலருக்கு கசக்கலாம் ஆனால் இது தான் வரலாற்று நிஜம்.
இன்று வடகிழக்கு பிரிந்திருக்கிறது 75 வருட காலமாக தேசியத்தை பேசி தமிழ் மக்களுடைய உரிமைகள் அத்தனையும் அழித்து இணைந்திருந்த வட கிழக்கை பிரித்திருக்கிறார்கள் இன்னும் 75 ஆண்டு காலம் வழங்கப்பட்டாலும் போலி தேசியத்தை பேசி தமிழ் மக்கள் உரிமைகள் அத்தனையும் இல்லாமல் செய்து வடகிழக்கில் தமிழ் பாடசாலை ஒன்று இருக்கிறதா என தேடித்திரியும் அளவிற்கு உங்கள் அரசியலை கொண்டு செல்வார்கள்.
உங்களுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை உங்கள் உறவினர்கள் சந்ததியினர் சொத்துடன் வாழ வேண்டும் என அரசியிலே டீல் போட்டு மதுபான அனுமதி பத்திரம் எடுப்பது கொழும்பில் சொகுசு வீடு கேட்பதும் இப்படியான டீல்களுடன் கடந்த கால ஆட்சியாளர்களுடன் நீங்கள் ஒட்டி உறவாடி இருந்தார்கள்
நீங்கள் நினைத்திருந்தால் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்திலே பிரிந்த வடகிழக்கை இணைந்திருக்க முடியும் அவைகளை சிந்திக்கவில்லை போலி தேசியம் என நரித்தோலை போர்த்திக் கொண்டு புலித் தோல் என்று சொல்லி மட்டக்களப்பு மக்களை மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய உரிமைகளையும் அழித்து கொண்டிருக்கின்றீர்கள் என்றார்.
