சுமார் 32 ஆண்டுகளுக்குப் பின் நேற்றைய தினம் 12.08.2025 செவ்வாய்க்கிழமை தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேகு ஜனாதிபதி அநூரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
அத்துடன், அமைச்சர்கள், தூதுவர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் சுமார் 7,000 இளைஞர், யுவதிகள் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.