தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்


"அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் தொலைநோக்குடன்  தேசிய  உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இன்று (12) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி  ஸ்ரீகாந்த் தலைமையில் இந்த விருதுகள் வழங்கும் போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்  மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி திணைக்களதில்   இருந்து 761 பங்கு பற்றுநருக்கான பிரதிநிதிகளுக்கான  அளவு கோல்களை தெளிவு படுத்தும் நிகழ்வு வின்சன்ட் மகளிர்  தேசிய  பாடசாலையிலும் அரச திணைக்கள பிரிவுகளில் இருந்து 761 பிரதிநிதிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும், உற்பதி மற்றும் சேவைகள் பிரிவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வு பழைய மாவட்ட செயலகத்திலும் இன்று இடம்பெற்றது.









இந்நிகழ்வுகளிற்கு பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம், தேசிய  உற்பத்திதிறன் செயலகத்தின் பணிப்பாளர் என்.எஸ்.ஜெயக்கொடி மற்றும்  தேசிய  உற்பத்திதிறன் செயலகத்தின் தலைமை காரியாலய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


குறித்த நிகழ்வில் வளவாளராக மாவட்ட  செயலக தேசிய  உற்பத்திதிறன் இணைப்பாளர் ஆர். புவனேந்திரன் உள்ளிட்ட தேசிய  உற்பத்திதிறன் செயலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டு வளலாண்மை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.