மட்டக்களப்பில் மூன்றாவது தடவையாக இடம்பெறும் Batticaloa Expo 2025 கண்காட்சியில் சிறுவர்களுக்கும் குதுகலம்!!
மட்டக்களப்பில் மூன்றாவது தடவையாக இடம்பெறும் Batticaloa Expo 2025 கண்காட்சியில் சிறுவர்களுக்கும் குதுகலம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணத்துறை, தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் Batticaloa Expo 2025 நிகழ்வானது மட்டக்களப்பில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக இடம் பெறவுள்ள Batticaloa Expo 2015 கண்காட்சியானது எதிர்வரும் ஜூலை 17 முதல் 20 திகதி வரையான நான்கு நாட்கள் சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறுவதுடன் இதில் சிறுவர்களுக்கான குதூகல விநோத அம்சங்களும் காணப்படவுள்ளதனால் குடும்ப சகிதம் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த வர்த்தக கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (03) திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் விடுதியில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நிர்மாணம், தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளுக்கிடையிலான தொடர்புகளை மாவட்டத்தில் வலுப்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஆண்டு பாரம்பரிய கண்காட்சியாக குறித்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கும் இக் கண்காட்சியானது சந்தர்ப்பமாக அமையுமெனவும் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் 175 இற்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், முன்னணி தொழில் நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஒன்று கூடி கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இக் கண்காட்சியானது கிழக்கு மாகாணத்திற்கும் இலங்கையின் பிற பகுதிகளுக்கும் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய பங்கினை வகிக்கும். அதே போல் சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வணிக நிறுவனங்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கும் உள் வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில், நுண் வணிகங்களுக்கு அவதானிப்பு கிடைக்கும் கண்காட்சி நாட்களில் பங்கேற்கும் நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகளும் சலுகைகளும் பார்வையாளரகளுக்கு கிடைக்கும்.
நிர்மாணம், உள்ளமைப்பு, இயந்திரங்கள், வேளாண்மை சார்ந்த தயாரிப்புகள், பதப்படுத்தல் மின் மற்றும் மின் உபகரணங்கள், கைத்தொழில் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், உணவு மற்றும் பானங்கள், பரிசுப் பொருட்கள், ஆடைகள், துணி, கருவி உபகரணங்கள் மற்றும் பல துறைகளுக்கான தயாரிப்புகளும் சேவைகளும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இக்கண்காட்டு Tima international (Pvt) Ltd மற்றும் Event Max Exhibitions ஆகியவற்றினால் இணைந்து ஒழுங்குபடுத்தப்படுகின்றது. 2008 இல் நிறுவப்பட்ட Tima international (Pvt) Ltd தொழில் முறை நிகழ்வு மேலாண்மை நிறுவனம் மற்றும் நாடு முழுவதும் முன்னணி கண்காட்சிகளை நடத்தி வரும் Event max Exhibitions ஆகியவற்றின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு 3வது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சி இதுவரை நடைபெற்ற Batticaloa Expo நிகழ்வுகளில் சிறந்த மற்றும் பிரதானமானதாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், Ceylon institute of Builders (CIOB), EDB மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள் ஆத)வு வழங்குவதன் மூலம் மாவட்ட தொழில்துறைகளை மேம்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மட்டக்களப்பு நகரில் உள்ள, பார்வையாளர்கள் மற்றும் காட்சியாளர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய வகையில் குறித்த வர்த்தக கண்காட்சி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள், தொழில் நிபுணர்கள் அனைவரையும் Batticaloa Expo 2025 ல் பங்கேற்று கிழக்கு மாகாணத்தில் தொழில் மற்றும் வணிக வலையமைப்புகளை விரிவாக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர் சார்பில் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர்.
குறித்த வர்த்தக கண்காட்சி தொடர்பாக இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, Event Max Exhibitions நிறுவனத்தின் முகாமையாளர் பிரசாத் பெரேரா, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தொழில் ஆலோசகர் சக்திவேல் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் எந்திரி த.அன்ரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.