யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் தொடர்பில் விசாரணையில் வெளியான விடயம்!

 இன்றையதினம், காலை யாழ்ப்பாணம், நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.



இந்தநிலையில், காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் யாழ்ப்பாணம், நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபர் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

Powered by Blogger.